Friday, June 3, 2011

மன அமைதி தரும் அன்னை ஆஷ்ரம்


மன அமைதி தரும் அன்னை ஆஷ்ரம்


தமிழ்நாட்டின் கரையோரம் சென்னையிலிருந்து தெற்கு வழியாக 160 கி.மி சென்று அடையும் இடம் புதுச்சேரி. சுமார் 3 மணி நேர தரை வழி பயணத்தில் புதுச்சேரி அடைவது உறுதி.
புதுச்சேரி மத்தியில் கடல் அன்னையின் கரைகள் விரிந்து பரவும் இடத்தின் அருகில் அமைந்துள்ளது மலர் அன்னையின் அரபிந்தோ ஆஷ்ரம். அன்னை ஆஷ்ரம் நாடும் பக்தர்கள் தங்கள் குறைகளை அன்னையின் பாதங்களில் சமர்பித்து மன அமைதி பெற்று வரலாம்.


புன்னகை தவழும் சாந்த சொரூபியாய் காட்சி தரும் அன்னை, இங்கு வரும் தன் பக்தர்களுக்கு தன் அன்பு கனிந்த பொற் கரங்களால் அருள் மழை பொழிவது உறுதி.


ஒவ்வொரு தினமும் அன்னையின் சமாதியருகே தியானத்துடன் துவங்கும் தினம் காலை முதல் மாலை வரை பக்தர்கள் அன்னையின் சமாதியில் பக்தியுடன் தியானித்து, தம் குறைகளை அன்னையின் பாதத்தில் சமர்ப்பித்து மனமுருக வேண்டுவது கண் கொள்ளா பக்தி பரவசமூட்டும் காட்சி.

1 comment:

  1. அருமை!
    அழகான கடற்கரையும், அமைதியான ஆஷ்ரமும் ,அதைவிட அம்மாவை முன்னோடியாக வைத்து வாழும் புதுச்சேரி மக்களின் சாந்த ஸ்வபாவம் தான் என்னையும் கவர்ந்தது !

    பயணம் தொடரட்டும் !வாழ்த்துக்கள்!

    ReplyDelete